search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வட்ட சட்டப்பணிகள் குழு"

    • பேரணியை வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும், சார்பு நீதிபதியான எம்.தர்ம பிரபு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • போதையை ஒழிப்போம், போதை பொருட்களைத் தவிர்ப்போம் என கோஷமிட்டவாறு சென்றனர்.

    தாராபுரம் :

    தாராபுரம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் புகையிலை மற்றும் போதை பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பேரணியை வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும், சார்பு நீதிபதியான எம்.தர்ம பிரபு தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி பொள்ளாச்சி சாலையில் கடைவீதி வழியாக அமராவதி ரவுண்டாணா சென்று மீண்டும் பள்ளி வளாகம் வந்தடைந்தது. அப்போது பள்ளி மாணவர்கள் போதைப் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளை விளக்கும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு போதையை ஒழிப்போம், போதை பொருட்களைத் தவிர்ப்போம் என கோஷமிட்டவாறு சென்றனர்.

    பேரணியின் முடிவில் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி எஸ்.பாபு, மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி மதிவதனி வணங்காமுடி ஆகியோர் மாணவர்களிடையே கூறியதாவது:-

    பீடி, சிகரெட், புகையிலை இவற்றை உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள், உயிர் கொல்லி நோய்களான கேன்சர், ஆஸ்துமா உள்ளிட்ட நோய்களின் பிறப்பிடமாகவும், பான் மசாலா, குட்கா உள்ளிட்ட பொருட்கள் பாதிப்பை ஏற்படுத்தும்,பள்ளியில் பயிலும் மாணவ- மாணவிகள் சிலரில் தங்களது பெற்றோர்கள் போதை பொருட்களுக்கு இலக்கானவர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு போதைப் பொருட்களின் தீமைகள் குறித்து எடுத்துரைத்து தகுந்த மருத்துவ சிகிச்சைகள் பெற்று நலவாழ்வு வாழ அவர்களை அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அறிவுரை வழங்கினர். தொடர்ந்து போதைப்பொருட்களை உபயோகிக்க மாட்டோம் போதை பொருட்களை ஒழிக்க உறுதுணையாக இருப்–போம் என அனைத்து மாணவர்களும் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

    பேரணியின் போது தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் கலைச்செழியன், சங்கச் செயலாளர் ராஜேந்திரன், பள்ளியின் தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வன் உள்பட 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • பாபநாசம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் நிகழ்ச்சி பாபநாசம் கிளை சிறையில் நடைபெற்றது.
    • மாவட்ட உரிமையியல் நீதிபதி மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவருமான அப்துல் கனி கிளை சிறை வளாகத்தில் மரக்கன்று களை நட்டு வைத்தார்.

    பாபநாசம்:

    பாபநாசம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் நிகழ்ச்சி பாபநாசம் கிளை சிறையில் நடைபெற்றது.

    தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதிபதி மதுசூதனன் உத்தரவுப்படி, சார்பு நீதிபதி சுதா வழிகாட்டுதலின்படியும், மாவட்ட உரிமையியல் நீதிபதி மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவருமான அப்துல் கனி கிளை சிறை வளாகத்தில் மரக்கன்று களை நட்டு வைத்தார்.

    அப்போது நாமும் நம் குடும்பத்தினர் ஒவ்வொ ருவரும் குறைந்தபட்சம் ஒரு மரக்கன்று ஆவது நட்டு பராமரித்து இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்று கூறினார்.

    பாபநாசம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் நிகழ்ச்சி பாபநாசம் கிளை சிறையில் நடைபெற்றது.இதில் அரசு வழக்கறிஞர் வெற்றி செல்வன், வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள்கம்பன், ஜெயகுமார் மற்றும் வழக்கறிஞர்கள்கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி யில் பாபநாசம் கிளை சிறையின் கண்காணி ப்பாளர் திவான், கிளைச் சிறை பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பாபநாசம் வட்ட சட்டப்பணிகள் குழுவில் சட்ட பணியாளர் தனசேகரன் செய்திருந்தார்.

    ×